ஏலத்திற்கு வருகிறது பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள்

தினகரன்  தினகரன்
ஏலத்திற்கு வருகிறது பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள்

டெல்லி:  பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலைப்பாகை, சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் என மோடிக்கு வழங்கப்பட்ட 1800க்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்கள், டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றை இம்மாதம் ஏலம்விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். ஏலத்தின்மூலம் கிடைக்கும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என  அவர் கூறினார். இந்த பரிசுப்பொருட்கள் விரைவில் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் நேரடியாகவும் இணையதளம் மூலமும் ஏலம்விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏலம் நேரடியாக 2 நாட்களும், இணையதளத்தில் 3 நாட்களும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான பொருட்களுக்கு அடிப்படை விலையாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டும் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை