உடுமலையில் வரலாற்று கலை விழா

தினமலர்  தினமலர்
உடுமலையில் வரலாற்று கலை விழா

உடுமலை:உடுமலை நகராட்சி உருவாக்கப்பட்டு, 100வது ஆண்டை முன்னிட்டு வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், வரலாற்று கலைவிழா நடந்தது.உடுமலை நகராட்சி, 1918ம் ஆண்டு உருவாக்கப்பட்டு நடப்பு ஆண்டுடன், நுாற்றாண்டைக் கடந்துள்ளது. நுாற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வரலாற்று கலைவிழா நடந்தது.
அதில், உடுமலையின் மண்ணின் மைந்தர்களை சிறப்பிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.அதன்படி, கவிஞர் புவியரசுக்கு நினைவுப்பரிசினை கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.உடுமலையின் வரலாறு, சிறப்புகள் குறித்து வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், 'உடுமலை 100' என்ற வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து தேவராட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உட்பட பாரம்பரிய நடனங்கள் நடந்தன. வீரத்தமிழர் சிலம்பாட்ட குழுவினர் சார்பில் களரி, வாள்வீச்சு போன்ற நிகழ்ச்சியும் இடம்பெற்றன.உடுமலை, இரண்டாம் கிளை நுாலகம், திருவள்ளுவர் திருக்கோட்டம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மூலக்கதை