பர்கர் வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ்

தினமலர்  தினமலர்
பர்கர் வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ்

வாஷிங்டன் : உலக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராகிிய பில்கேட்ஸ், நர்கர் வாங்க ஹோட்டல் முன் வரிசையில் நின்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 'டிக்ஸ் டிரைவ் இன்' என்ற சிறிய ஓட்டலுக்கு பர்கர் வாங்க சென்றபோது அங்கு ஏற்கனவே சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தொடர்ந்து பில்கேட்சும் வரிசையில் நின்று பர்கரை வாங்கினார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து பில்கேட்சுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை, தற்போது அதனை விரும்புகிறேன், என கூறி சென்றுள்ளார்.

மூலக்கதை