மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..

மிசௌரி தமிழ்ச்சங்கம் தொடங்கி 25 ஆண்டுகளாகிவிட்டதை தொடர்ந்து அதன் வெள்ளிவிழாவை மிகழ்ச்சிறப்பாக கொண்டாட மிசௌரி வாழ் தமிழர்கள் தயாராகிவருகிறார்கள்.

தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா வரும் ஜனவரி 26, 2019 அன்று மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுதும் திட்டமிடப்படும் இவ்விழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகிறது. சேர்ந்திசையுடன் தொடங்கும் விழாவில், தமிழ்ச்சங்கத்தின் வரலாறு சார்ந்த நிகழ்வுகள், மாணவர்கள் குறள் மறையோதல், தமிழ்க் கிராம கடைவீதி, இலக்கிய வினாடி வினா, பட்டிமன்றம், யாதும் ஊரே எனும் பிறமொழியினர் கலைநிகழ்ச்சிகள், கைச்சிலம்பாட்டம், கழியாட்டம், கருப்பசாமி ஆடல்,பாடல், நையாண்டிமேளம் களைகட்டுகிறது. தலைவாழையிலை விருந்துடன் இரவு இன்னிசை நிகழ்ச்சியும் ஏற்பாடாகியுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி , மிசௌரி தமிழ்ச்சங்க நிறுவனரும், முதல் தமிழ்ச்சங்கத் தலைவருமான முனைவர்.அரசு செல்லையா, வாசிங்டன் வட்டாரத் தம்ழ்சச்சங்கத்தின் மேனாள் தலைவர் திரு.ச.பார்த்தசாரதி, முனைவர்.பாலா சுவாமிநாதன் (நியூயார்க் தமிழ் கல்விக்கழகம்) மற்றும் முனைவர். சேகர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

இந்த வெள்ளிவிழாவை வாழ்த்தி அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்கங்களும் , சான்றோர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுவருகிறார்கள். இதை வலைத்தமிழ்.காம் ஒருங்கிணைத்து வெளியிடுகிறது.

மூலக்கதை