அதிகரித்த இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு!!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிகரித்த இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு!!

புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்ரோன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த சில மாதங்களாக பல்வேறு நெருக்கடிக்குள் சிக்கி தொடர்ச்சியாக தனது செல்வாக்கினை இழந்து வரும் மக்ரோனின் செல்வாக்கு தற்போது 4 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. JDD பத்திரிகைக்காக iFop நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. தற்போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 30 புள்ளிகளுடன் உள்ளார் எனவும் கடந்த வார கணக்கெடுப்பில் இருந்து 4 புள்ளிகள் இது அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக ஜனவரி 10 ஆம் திகதி   Le Figaro பத்திரிகைக்காக Kantar Sofres Onepoint நிறுவனம் எடுத்திருந்த கருத்துக்கணிப்பில் மக்ரோன் 22 புள்ளிகளுடன் இருந்தார் எனவும், ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி சந்திக்கும் மிக குறைவான செல்வாக்கு இது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சில புள்ளிகள் அதிகரித்து தற்போது 30 வீத செல்வாக்குடன் மக்ரோன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை