உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!

கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை தீவிரமாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குசல் மெண்டிஸிற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை அறிக்கையின்படி, அவரது விரலில் முறிவுகளோ அல்லது பெரிய காயங்களோ இல்லையென இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் ஜெரில் வௌர்டஷ் தெரிவித்துள்ளார்.
 
குசல் மெண்டிஸின் உபாதை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் இன்று காலை குசல் மெண்டிஸை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தோம்.
 
எக்ஸ்ரே அறிக்கையின்படி, குசல் மெண்டிஸிற்கு தீவிரமான காயங்கள் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் அவரின் கையில் இன்னும் சிறிய எரிச்சல் இருப்பதால், இப்போதைய நிலையில் அவர் துடுப்பெடுத்தாடுவது சாத்தியமற்றது” என தெரிவித்துள்ளார்.
 
குசல் மெண்டிஸ் நேற்று முந்தினம் முதல் நாள் ஆட்டத்தின் போது, டில்ருவான் பெரேராவின் ஓவருக்கு சோர்ட் லெக் (Short Leg) பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட நிலையில், ஜெக் டொரன் அடித்த பந்து வேகமாக வந்து அவரது கைவிரலை பதம் பார்த்திருந்தது.
 
இதன் பின்னர் களத்திலிருந்து சிகிச்சைக்காக வெளியேறிய குசல் மெண்டிஸ், எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், துடுப்பெடுத்தாடுவதற்கும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை