முடிவடைந்தது மகரவிளக்கு, மண்டல பூஜை..... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது

தினகரன்  தினகரன்
முடிவடைந்தது மகரவிளக்கு, மண்டல பூஜை..... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது

நிலக்கல்: சபரிமலையில் ஐயப்பன் கோவில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வந்ததால் இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சமீபத்தில் கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே கேரள அரசு இந்த மண்டல பூஜை காலத்தில் இதுவரை 51 பெண்கள் கோவிலுக்கு வந்ததாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மகரவிளக்கு, மண்டல பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை சில பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது. மீண்டும்  மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

மூலக்கதை