சர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா

தினமலர்  தினமலர்
சர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர், ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் மாம்புள்ளி இயக்கும் இந்த படத்திற்கு ஒரு அடார் லவ் படத்தின் ஒளிப்பதிவாளர் சீனு சித்தார்த் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் வெளியானதும் ஸ்ரீதேவி பங்களா படம் சர்ச்சைகளை உருவாகியுள்ளது. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ண வைப்பது போல இந்த டிரைலரில் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதனால்தான், இந்தப்படத்திற்கு ஸ்ரீதேவி பங்களா என்று பெயரிடப்பட்டிருக்கிறது என்று எண்ண வைத்தது.

இந்த டிரைலருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தாலும் அதே நேரம் ஸ்ரீதேவி பங்களா படத்துக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. குறிப்பாக, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் , ஸ்ரீதேவி பங்களா படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடர உள்ளாராம்.

மூலக்கதை