நடிகை விவகாரத்தில் நழுவிய குஞ்சாக்கோ போபன்

தினமலர்  தினமலர்
நடிகை விவகாரத்தில் நழுவிய குஞ்சாக்கோ போபன்

மலையாள திரையுலகில் சாக்லேட் ஹீரோ என சொல்லப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன்,, கடந்த வருடம் சுமார் 8 திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வருடம் அவரது முதல் படமாக அல்லு ராமேந்திரன் என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் குஞ்சாக்கோ போபன்.

அப்படி ஒரு நிகழ்ச்சியின் போது அவரிடம் கடந்த வருடம் கடத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் விவகாரம் குறித்து கேட்டபோது அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார் குஞ்சாக்கோ போபன்.

அதேசமயம் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பாக யாரோ ஒருத்தர் மீது தேவையில்லாமல் அவதூறு பரப்பி வீண் பழி சுமத்துவதும் கூடாது என்றும் கூறியுள்ளார் குஞ்சாக்கோ. இதன்மூலம் அந்த நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பையும் விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாகவும் நழுவலாக பதில் சொல்லியிருக்கிறார் குஞ்சாக்கோ போபன்

மூலக்கதை