மைக்கேல் ரிலீஸ் ; உற்சாகத்தில் மஞ்சிமா

தினமலர்  தினமலர்
மைக்கேல் ரிலீஸ் ; உற்சாகத்தில் மஞ்சிமா

அறிமுகமான முதல் படமான 'ஒரு வடக்கன் செல்பி' வெற்றி பெற்றும் பெரிய அளவில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் நடிகை மஞ்சிமா மோகன். தமிழில் கௌதம் மேனன் டைரக்ஷனில் நடித்த பின்பு ஒரு ரவுண்டு வரலாம் என நினைத்தவருக்கு, தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மலையாளத்தில் ரீமேக்காக உருவாகி வரும் ஜம்ஜம் படத்தில் நடித்து முடித்துவிட்டார் மஞ்சிமா அதுமட்டுமில்ல இன்னொரு பக்கம் நிவின்பாலிக்கு ஜோடியாக மைக்கேல் என்கிற படத்திலும் நடித்து வந்தார் மஞ்சிமா.

இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மேரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சிமாவுக்கும் ரசிகர்களின் பாராட்டு கிடைத்துள்ளது. இதனால் சோர்வடைந்து இருந்த மஞ்சிமா மோகன் உற்சாகமாகி உள்ளாராம்.

மூலக்கதை