அமீருக்காக 4 மாதங்கள் ஒதுக்கிய மம்முட்டி

தினமலர்  தினமலர்
அமீருக்காக 4 மாதங்கள் ஒதுக்கிய மம்முட்டி

மம்முட்டியை வைத்து தி கிரேட் பாதர் என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹனீப் அதேனி. அதைத்தொடர்ந்து மம்முட்டி நடித்த ஆபிரகாமிண்டே சந்ததிகள் படத்திற்கு கதை எழுதி அதையும் ஹிட்டாக்கினார். இடையில் தற்போது நிவின்பாலி நடிப்பில் மைக்கேல் என்கிற படத்தை இயக்கி நேற்று ரிலீஸ் செய்துள்ளார்.

இதற்கிடையில் 'அமீர்' என்கிற கதை ஒன்றையும் மமுட்டிக்காக தயார்செய்து வந்தார் ஹனீப் அதேனி. இந்த கதையும் மம்முட்டிக்கு பிடித்து போய்விடவே அதிலும் நானே நடிக்கிறேன் என கூறி, வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் இந்த படத்திற்கு தொடர்ந்து நான்கு மாதங்களில் போதுமான அளவுக்கு கால்சீட்டை வாரி வழங்கியுள்ளார்

ஆனால் இந்த படத்தின் கருவை முதலில் உருவாக்கிய வினோத் விஜயன் என்பவருக்கே இந்த படத்தின் டைரக்சன் பொறுப்பைதை விட்டுக்கொடுத்து விட்டார் ஹனீப் அதேனி. சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது.

மூலக்கதை