விஸ்வாசம் - தெலுங்கில் பிப்ரவரி 1 ரிலீஸ்

தினமலர்  தினமலர்
விஸ்வாசம்  தெலுங்கில் பிப்ரவரி 1 ரிலீஸ்

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள விஸ்வாசம் படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. தமிழ்நாடு வினியோகஸ்தர் 8 நாட்களில் 125 கோடியை வசூலித்ததாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைத் தவிர விஸ்வாசம் படத்திற்கு கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில்தான் பெரும் வரவேற்பு கிடைத்தது. கேரளாவில் கூட சுமாரான வசூலைத்தான் பெற்றது.

தமிழில் படம் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், அங்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். தமிழில் படம் பெரிய வெற்றி என்பதால் இப்போது தெலுங்கில் படத்தைத் திரையிட பலர் முன் வந்துள்ளார்களாம்.

அஜித்திற்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் இல்லை. இருப்பினும் நயன்தாரா, ஜெகபதி பாபு ஆகியோர் படத்தில் இருப்பதால் தெலுங்கு ரசிகர்களுக்குரிய ஆக்ஷன் மசாலா படத்தில் இருப்பதால் அங்கும் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மூலக்கதை