மணிரத்னம் படத்தில் நானி

தினமலர்  தினமலர்
மணிரத்னம் படத்தில் நானி

செக்கச்சிவந்த வானம் படத்தை சிம்பு, அரவிந்த்சாமி, விஜயசேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யாராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கினார் மணிரத்னம். அதையடுத்து மீண்டும் மல்டி ஹீரோக்களை வைத்து தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இயக்க தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம், சிம்பு, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நானியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், செக்கச்சிவந்த வானம் படத்திலேயே நானியை ஒரு வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் அப்போது நானி வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் அருண்விஜய்யை நடிக்க வைத்தார். அதனால் இந்த படத்தில் அவரை எப்படியேனும் நடிக்க வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

மூலக்கதை