வதந்தி பரப்ப வேண்டாம் - அஜீத்

தினமலர்  தினமலர்
வதந்தி பரப்ப வேண்டாம்  அஜீத்

விஸ்வாசம் படத்தை அடுத்து பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜீத்குமார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கும் இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

மேலும், இந்த படத்தை அடுத்து மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார் அஜீத். இந்த தகவலை அஜீத்தரப்பில் இருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு 2020 வரை நடைபெறுகிறது. இதன்பிறகு நடிக்க எந்த படத்திலும் அஜீத் ஒப்பந்தமாகவில்லை. அதனால் இதுதவிர இன்னொரு தயாரிப்பாளர் படத்திலும் அஜீத் ஒப்பந்தமாகியிருப்பதாக இருப்பதாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அஜீத் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

விஸ்வாசம் படத்தை அடுத்து மீண்டும் அஜீத் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. அதையடுத்து தனது மேனேஜர் மூலம் இப்படியொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் அஜீத்குமார்.

மூலக்கதை