சமூக விழிப்புணர்வு கதையில் சிவகார்த்திகேயன்

தினமலர்  தினமலர்
சமூக விழிப்புணர்வு கதையில் சிவகார்த்திகேயன்

மெரினா படம் தொடங்கி ரஜினி முருகன் வரை காமெடி கலந்த கதைகளுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து வந்தார் சிவகார்த்திகேயன். அதேசமயம் மான்கராத்தே, காக்கி சட்டை என சில படங்களில் ஆக்சன் கதைகளிலும் நடித்தார். அதற்கடுத்து சீமராஜாவில் சரித்திர கால கெட்டப்பிலும் நடித்தார்.

இந்நிலையில், தற்போது ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக இன்று நேற்று நாளை டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமான இந்த படம் சமூக விழிப்புணர்வு கதையில் உருவாகிறது.

மூலக்கதை