டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்

PARIS TAMIL  PARIS TAMIL
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலைவருமான ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

 
டோனிக்கு நிகரான ஒருவர் இல்லையென அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரவி சாஸ்திரி, டோனிக்கு நிகரான வீரர் இங்கு எவரும் இல்லை. அவருக்கு மாற்றுவீரர் யாருமில்லை. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதனால்தான் டோனி ஆடும்வரை அவரது ஆட்டத்தை ரசிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களிடம் கோருகிறேன் என்றும் அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், ரிசப் பன்ட் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரவி சாஸ்திரி, அவர் விளையாட்டின் தூதுவர் என்று தெரிவித்துள்ளார்.
 
அத்தோடு, ரிசப் பன்ட்-இன் ஹீரோ டோனிதான் என்றும் ஒவ்வொரு நாளும் டோனியுடன் அவர் உரையாடுவார் என்றும் கூறியுள்ளார்.
 
டெஸ்ட் தொடரின் போது அவர் டோனியிடம் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய விஷயமாகும் என தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
அதேபோல வீராட் கோஹ்லி – டோனி இடையேயான பரஸ்பர மரியாதை நம்பமுடியாத ஒன்றாகும் என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 
வீரர்களின் ஆட்டத்தில் நான் அதிகம் தலையிடுவதில்லை. தேவைப்பட்டால் சிலவேளைகளில் ஆலோசனை வழங்குவேன். ஒரு வீரர் எதை பார்த்து பயப்படுகிறாரோ அதில், தலையிட்டு பிரச்சினையை சீர் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 

மூலக்கதை