பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு தம்பிதுரையின் சொந்த கருத்து: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு தம்பிதுரையின் சொந்த கருத்து: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

பெரம்பலூர்: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். பி.   பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே கொடநாடு பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எள்ளளவும் தொடர்பு இல்லை.

தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். இப்போது பா. ஜ.

கூட்டணி வேண்டாம் என  தம்பிதுரை சொல்வது அவரது சொந்தக்கருத்து. கட்சியின் கருத்து இல்லை.

அரசியல் சூழலுக்கேற்ப பேசுவது வழக்கம். ஆனால் கூட்டணி பற்றி முடிவெடுப்பது கட்சி தலைமைதான்.   விமர்சனம் செய்வது வேறு.

கூட்டணி என்பது வேறு. ஒத்த கருத்துள்ள சிலர், ஒருசில குறிக்கோளோடு கூட்டணி வைப்பார்கள்.



இந்தியாவை உலகஅரங்கில் வல்லரசாக உருவாக்குகிற சில கருத்துக்களின் அடிப்படையில், குறைந்தபட்ச கருத்துக்களின் அடிப்படையில் கூட்டணி என்பது அமையும். கூட்டணி என்பதுவேறு.

கட்சியின் கொள்கை என்பதுவேறு.

பாஜகவோடு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியா என்பதை தலைமைதான் முடிவு செய்யும்.   இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை