டெஸ்ட்!உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு கவர்னர்..ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுரை.

தினமலர்  தினமலர்
டெஸ்ட்!உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு கவர்னர்..ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுரை.

புதுச்சேரி:நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் அடங்கிய கூட்டு குழு ஏற்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். கவர்னர் கிரண்பேடி, அரசு சேவைகளை தரமாக அளிக்க, அதிகாரிகளுக்கு தேர்வு வைத்து ஆலோசனை வழங்கி வருகிறார். அதன்படி நேற்று உள்ளாட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு ராஜ்நிவாசில் சுயமதிப்பீடு தேர்வு நடந்தது.இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பலம், பலவீனம், வாய்ப்புகள், பிரச்னைகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.தேர்வில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் முதன்மை இடங்களை பிடித்தனர். பிற அதிகாரிகள் ஏ கிரேடில் மதிப்பெண் பெற்றிருந்தனர். இவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கவர்னர்்கிரண்பேடி அறிவித்தார்.பின்னர், கவர்னர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆய்வின் சில விஷயங்கள் தெரிய வந்தது. குறைந்த அளவே வருவாய் பெருக்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருப்பதும், வரி வசூல் முறை பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம், கட்டணம், வரிகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் தெரிய வந்தது.மக்களிடம் இடங்களை துாய்மையாக வைத்தல், தண்ணீர் சேமிப்பு, குப்பைகளை பிரித்து வழங்க போதுமான விழிப்புணர்வு இல்லாததும் தெரிய வந்ததது. அதுமட்டுமின்றி பணியாட்கள் பற்றாக்குறை இருப்பதால் பில் கலெக் ஷன், சர்வே பணிகளில் தொய்வு இருப்பதும் கண்டறியப்பட்டது.மேலும்,ஊரக மேம்பாட்டு துறையானது, பஞ்சாயத்து அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டு பொறுப்புடன் கிராமங்களில் வளர்ச்சி பணிகளை ஏற்படுத்த வேண்டும். நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் அடங்கிய கூட்டு குழு ஏற்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் பிற நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பயிற்சி பெற வேண்டும். இதே போல் பொறியாளர்கள், அதிகாரிகள் திட, திரவ கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை