ஆய்வு! தரும சாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..தைப்பூசத்தை முன்னிட்டு நடவடிக்கை

தினமலர்  தினமலர்
ஆய்வு! தரும சாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..தைப்பூசத்தை முன்னிட்டு நடவடிக்கை

வடலுார்:வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆய்வு செய்தார்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்யஞான சபையில் வரும் 21ம் தேதி தை பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அதனையொட்டி, வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள உணவு சமைக்கும் இடத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தட்சணாமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன், நல்லதம்பி, ரவிச்சந்திரன், கொளஞ்சி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.தருமசாலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு அயோடின் கலந்து பயன்படுத்த வேண்டும். தரிசனத்தில் அன்னதானம் வழங்க வருபவர்கள் வடலுார் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து வழங்க வேண்டும்.தருமச்சாலையில் தைப்பூசத்தில் தரமான உணவு, சூடாகவும் வழங்கவும், விடுதிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தினர். அன்னதானம் வழங்குபவர்கள் பாக்குமட்டை தட்டு, வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பேப்பர் தவிர்க்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் உணவு வழங்க வருபவர்கள் உணவு வழங்க ஒதுக்கிய இடத்தில் வைத்து வழங்கிவிட்டு கழிவு பொருட்களை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

மூலக்கதை