பரிசில் 12 பேர் கைது! - இரண்டு காவல்துறையினர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் 12 பேர் கைது!  இரண்டு காவல்துறையினர் காயம்!!

இன்றைய பத்தாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் நிறைவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், பரிசில் இதுவரை (14:00 தகவல்களின் படி) 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள place d'Italie பகுதியை போராளிகள் முற்றுகையிட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவு வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக அடையாள அட்டைச் சோதனைகள், கற்கள், எரிகுண்டுகள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என பரிசின் பல பகுதிகளில் இருந்து 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
La-Tour-du-Pin (Isère) பகுதியில் மஞ்சள் மேலங்கி போராளி ஒருவர் குதிரை ஒன்றில் கொடி பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  
 
 
பிரான்சின் தேசிய அடையாள வார்த்தைகளை <<Liberté, Egalité, Flashball>> என மாற்றி மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (Flashball -  காவல்துறையினரின் இறப்பர் குண்டுகள் கொண்ட துப்பாக்கி) அரசு தங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுவதற்கு சிறிதளவும் தயங்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
<<நாங்கள் போருக்கு எதிரானவர்கள் தான். ஆனால் காவல்துறையினர் மிக மோசமாக மிக மிக மோசமாக எங்கள் மீது வன்முறை பிரயோகிக்கின்றனர். இது Castaner இன் (உள்துறை அமைச்சர்)  கட்டளையாகத் தான் இருக்கும்>> என அவர்கள் மிக தீர்க்கமாக குறிப்பிட்டனர். 
 
 
சற்று முன்னர் கிடைத்த தகவல்களின் படி, Rennes நகரில் மஞ்சள் மேலங்கி போராளிகளால் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
 
 

மூலக்கதை