பைனலில் சிட்னி அணி * ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி | ஜனவரி 19, 2019

தினமலர்  தினமலர்
பைனலில் சிட்னி அணி * ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி | ஜனவரி 19, 2019

 சிட்னி: பெண்களுக்கான பிக் பாஷ் ‘டுவென்டி–20’ தொடரின் பைனலுக்கு சிட்னி சிக்சர்ஸ் அணி முன்னேறியது. அரையிறுதியில் மெல்போர்ன் ரெனிகேட்சை ‘சூப்பர் ஓவரில்’ வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது அரையிறுதியில் சிட்னி சிக்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று களமிறங்கிய சிட்னி அணிக்கு பெர்ரி (54), டி வான் (51) கைகொடுக்க 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணி சோபியே (55) கைகொடுத்தார். 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுக்க போட்டி ‘டை’ ஆனது. அடுத்து நடந்த ‘சூப்பர் ஓவரில்’ ரெனிகேட்ஸ் அணி 6 பந்தில் 6 ரன்கள் மட்டும் எடுத்தது. சிட்னி அணியின் 4 பந்தில் 9 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 26ம் தேதி நடக்கும் பைனலில் சிட்னி சிக்சர்ஸ், பிரிஸ்பேன் அணிகள் மோதவுள்ளன.

மூலக்கதை