மகரவிளக்கு காலம் நிறைவு நாளில் சபரிமலைக்கு மேலும் 2 இளம்பெண்கள் வருகை: போலீசார் திருப்பி அனுப்பினர்

தினகரன்  தினகரன்
மகரவிளக்கு காலம் நிறைவு நாளில் சபரிமலைக்கு மேலும் 2 இளம்பெண்கள் வருகை: போலீசார் திருப்பி அனுப்பினர்

திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்கு கடந்த 16ம் தேதி வந்து திருப்பி அனுப்பப்பட்ட 2 இளம்பெண்கள், நேற்று அதிகாலை மீண்டும் தரிசனத்திற்கு வந்தனர். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றுக் கூறி ேபாலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு காலம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 16ம் தேதி கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு வந்தனர். இவர்களை போலீசார் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் சரங்குத்தி பகுதியில் வைத்து பக்தர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் இருவரையும் கட்டாயப்படுத்தி திரும்ப அழைத்து சென்றனர்.இந்த நிலையில், ேநற்று அதிகாலை 5.15 மணியளவில் ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா ஆகியோர் உள்பட 8 பேர் அடங்கிய குழு நிலக்கல் வந்தது. இதில் 6 பேர் ஆண்கள். இவர்கள் இளம்பெண்களுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள். இதையடுத்து ரேஷ்மா நிஷாந்த், ஷானிலா இருவரும் நிலக்கல்லில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம், தங்களுக்கு சபரிமலை தரிசனத்திற்கு செல்ல பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதுபற்றி டிஜிபியிடம் நிலக்கல் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் தரிசனத்திற்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று டிஜிபி கூறினார். இதனால் இருவரையும் தரிசனத்திற்கு அழைத்து செல்லமுடியாது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் இருவரையும் எருமேலிக்கு திருப்பி அனுப்பினர்.இரண்டரை மாதத்தில் 2,012 வழக்குகள்சபரிமலை விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கேரள போலீஸ் தாக்கல் செய்தது. இதில், அக்.17 முதல் ஜன.4ம் ேததி வரை 2,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் 67,094 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 10,561 பேர் மீது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை