எல் அண்ட் டிக்கு அனுமதியில்லை

தினமலர்  தினமலர்
எல் அண்ட் டிக்கு அனுமதியில்லை

புதுடில்லி: பொறியியல் துறையைச் சேர்ந்த, எல் அண்ட் டி நிறுவனத்தின், பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு அனுமதி வழங்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ மறுத்து விட்டது.எல் அண்டு டி என, சுருக்கமாக அழைக்கப்படும், ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம், வெளிச் சந்தையில் இருந்து, 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெற, 2018ல் செபியிடம் அனுமதி கோரியிருந்தது.பங்கு ஒன்றுக்கு, 1,475 ரூபாய் வீதம், 6.10 கோடி பங்குகளை, முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்பப் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பங்குகளை திரும்பப்பெறும் பட்சத்தில், வெளிச் சந்தையில், எல் அண்டு டி நிறுவனத்தின் பங்குகள் புழக்கம் குறையும்.இந்நிலையில், எல் அண்டு டி விண்ணப்பத்தை பரிசீலித்த செபி, பங்குகளை திரும்பப் பெறும் பட்சத்தில், நிறுவனத்தின் பிணை மற்றும் பிணையற்ற மொத்த கடன் மற்றும் கையிருப்பு விகிதம், நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு ஏற்ப இருக்காது எனக் கூறி, அனுமதி வழங்க மறுத்து விட்டது.இது, பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தில் பங்கேற்க ஆவலாக இருந்த முதலீட்டாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை