மெக்சிக்கோவில் ஏற்பட்ட விபரீதம் - எரிபொருளுக்கு ஆசைப்பட்ட உயிரை விட்ட மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
மெக்சிக்கோவில் ஏற்பட்ட விபரீதம்  எரிபொருளுக்கு ஆசைப்பட்ட உயிரை விட்ட மக்கள்

 மத்திய மெக்ஸிகோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில், சம்பவ இடத்தில் இருந்த 71 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.
 
குழாய்களில் ஊடாக செல்லும் எரிபொருளை சிலர் திருடி கொள்கலன்களில் நிரப்புவதற்கு முயற்சித்த போதே இந்த வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்று ஹிடால்கோ மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
இதனையடுத்து வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பான ஔிப்படங்களை மெக்ஸிகோ தேசிய பாதுகாப்பு செயலகம் டுவிட்டரில் வௌியிட்டுள்ளது.
 
இதுதவிர இரவு வானில் கொளுந்துவிட்டெறியும் எரிவாயு குழாய்களின் காணொளியை அந்த நாட்டு தொலைக்காட்சிகளும் ஔிபரப்பி வருகின்றன. குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கூச்சலிட்டு உதவி கோரும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
 
சம்பவத்திற்கு முன்தினம் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் வௌியான காட்சிகளில், எரிபொருள் குழாய்களின் ஊடாக கசியும் எரிபொருளை சேகரிப்பதற்காக பொதுமக்கள் கொள்கலன்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை