விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர் இந்தியா அறிவிப்பு!

 

விமானப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கான சலுகை பெறும் விதிமுறைகளை ஏர்- இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. பயணக் கட்டணத்தில் 50 சதவீதம்  சலுகை அளிக்கப்படும். மேலும், மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு, பயண நாளன்று 60 ஆகி இருக்க வேண்டும். அதற்கான செல்லுபடியாகும் ஆதாரத்தை பயணத்தின் முன் சோதனை செய்யும் இடத்தில் காட்ட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை,  கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஏர்- இந்தியா வழங்கிய மூத்த குடிமகன் என்பதற்கான சான்று இவை உள்பட ஏதேனும் வயதைக் குறிப்பிடும் சான்று ஏற்கப்படும். எந்தப் பகுதிக்கும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மூத்த குடிமக்கள் விமானப் பயணம் செய்யலாம். பயணச்சீட்டு வாங்கியதில் இருந்து ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். விமானம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பயணச்சீட்டு வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு தள்ளுபடி கிடையாது.  வயதுச்சான்று காண்பிக்கத் தவறினால் பயணம் செய்ய முடியாது. கட்டணமும் திரும்பப் பெற முடியாது. வரிகள் மட்டுமே பெற முடியும். இவ்வாறு ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

விமானப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கான சலுகை பெறும் விதிமுறைகளை ஏர்- இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

பயணக் கட்டணத்தில் 50 சதவீதம்  சலுகை அளிக்கப்படும்.மேலும், மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு, பயண நாளன்று 60 ஆகி இருக்க வேண்டும். அதற்கான செல்லுபடியாகும் ஆதாரத்தை பயணத்தின் முன் சோதனை செய்யும் இடத்தில் காட்ட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை,  கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஏர்- இந்தியா வழங்கிய மூத்த குடிமகன் என்பதற்கான சான்று இவை உள்பட ஏதேனும் வயதைக் குறிப்பிடும் சான்று ஏற்கப்படும்.

எந்தப் பகுதிக்கும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மூத்த குடிமக்கள் விமானப் பயணம் செய்யலாம்.

பயணச்சீட்டு வாங்கியதில் இருந்து ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். விமானம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பயணச்சீட்டு வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு தள்ளுபடி கிடையாது. வயதுச்சான்று காண்பிக்கத் தவறினால் பயணம் செய்ய முடியாது. கட்டணமும் திரும்பப் பெற முடியாது. வரிகள் மட்டுமே பெற முடியும். இவ்வாறு ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

 

மூலக்கதை