விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார்

தினமலர்  தினமலர்
விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார்

லண்டன், இங்கிலாந்து இளவரசர் பிலிப் 97, ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் 97, கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே லேண்ட்ரோவர் காரில் சென்ற போது அவ்வழியாக வந்த மற்றொரு கார் மோதியது. விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இருவர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்ற பின்னர் வீடு திரும்பினர்.
லேண்ட்ரோவர் கார் சாலையின் ஓரத்தில் ஒருபக்கமாக கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இளவரசருக்கு இந்த விபத்தில் எந்த காயமும் ஏற்பட வில்லை எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை