பாகிஸ்தானில் இசைக்கு தடை

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத், விமானங்களில் மெல்லிய இசை ஒலிப்பரப்புவது வழக்கம். ஆனால், பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானங்களில் இவ்வாறு இசை ஒலிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தான் அரசு விமான நிறுவனமான பி.ஐ.ஏ.,வின் செய்தி தொடர்பாளர் மசூத் தாஜ்வார் செய்தியாளர்களிடம் கூறியது: பாகிஸ்தானில் இருந்து ஜெட்டா மற்றும் மெதினா செல்லும் விமானங்களில் இசை ஒலிப்பரப்புவதற்கு பதில் குரான் வாசகங்கள் மற்றும் சமயம் சார்ந்த தகவல்கள் ஒலிபரப்பப்படும். புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் நன்மைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற விமானங்களில் வழக்கம் போல இன்னிசை ஒலிக்கப்படும், என்றார்.

மூலக்கதை