டிரம்ப் எச்சரிக்கையை மீறும் வெளிநாட்டினர்: அமெரிக்க போலீசார் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்

நியூயார்க், அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை மீறி, அரிசோனா மாகாணத்தின் வழியே அமெரிக்காவிற்குள் நுழைந்த கவுதமாலா நாட்டினர் 375 பேரை போலீசார் கைது செய்தனர்.வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் எல்லை மீறி நுழைவதை தடுக்க, அமெரிக்க - மெக்சிக்கோ எல்லையில் தடுப்பு சுவர் அமைக்க, அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு, அந்நாட்டின் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை.கடந்த நவம்பரில் சான் லூயிஸ் துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியில் உள்ள எல்லைச் சுவரின் மீது ஏறி குதித்து அமெரிக்காவிற்குள் நுழைந்த 80 பேர் பிடிபட்டனர். சிறிது நேரத்திலேயே மற்றொரு 80 பேர் கொண்ட கும்பல் எல்லைச் சுவரின் மேல்பகுதியில் துளையிட்டு அமெரிக்காவிற்குள் நுழைந்த போது கைது செய்யப்பட்டனர்.அரிசோனா மாகாணத்தின் யூமா நகரத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 2,117 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்நகரத்தின் வழியே நுழைந்த 26,244 பேரை எல்லை ரோந்து போலீசார் கைது செய்துள்ளனர்.தேசிய எல்லை ரோந்துக்குழு தலைவர் பிராண்டன் ஜூடு கூறியது: அடிக்கடி 20,30 பேர் கொண்ட குழுவாகத் தான் வருவர். சில நேரங்களில் 100 பேர் கொண்ட கூட்டமாக வருவர். ஆனால் டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி 375 பேர் கொண்ட பெரிய கூட்டம் வந்துள்ளது, என்றார்.

மூலக்கதை