கிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு

தினமலர்  தினமலர்
கிம் ஜாங் உன்  டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு

வாஷிங்டன் : அணு ஆயுத குவிப்பை குறைப்பதற்கான முயற்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அடுத்த மாத இறுதியில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இடமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வட கொரியா நியமித்துள்ள சிறப்பு அதிகாரியான கிம் யோங் சோல், அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிம்யோங் அமெரிக்கா வந்தபின்னர் அமெரிக்கா-வடகொரியா இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தித்து அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மூலக்கதை