எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்ட் பெயர் மாற்றம்

தினமலர்  தினமலர்
எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்ட் பெயர் மாற்றம்

புதுடில்லி : ஆயுள் காப்பீட்டு துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர், எஸ்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் என, மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்ற பின், பல ஆண்டுகளாக, இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில், மதிப்பு மிக்க பிராண்டுகளில் ஒன்றாக, எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் என்ற பெயருடன் பிரபலமாக விளங்குகிறது.இந்த பிராண்டு பெயரிலேயே நிறுவனம் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, உரிய அரசு அமைப்புகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, 2000ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம், 1,000த்திற்கும் மேற்பட்ட நகரங்களில், 414 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

மூலக்கதை