வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்!  அதிர்ச்சியில் காவல்துறையினர்!!

78 வயதுடைய நபர் ஒருவர் தனது வாகன திருத்துமிடத்தில் 162 கஞ்சாச்செடிகளை தோட்டமாக பயிரிட்டுள்ளார். இதை நேரில் பார்த்த காவல்துறையினர் முதலில் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டனர். 
 
இச்சம்பவம் Calvados நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 78 வயதுடைய நபர் ஒருவர் தனது நிலப்பரப்புக்குள் இருந்த ஒரு இடத்தில் திரையால் மூடப்பட்ட மகிழுந்து திருத்துமிடம் ஒன்றை வைத்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் வாகனங்களை திருத்துவதற்கு பதிலாக கஞ்சா செடியினை சாடியில் வைத்து வளர்த்துள்ளார். தினமும் புதிதாக பயிருடுவதும், நீர் பாய்ச்சுவதும் என இருந்த அவர் ஒரு கட்டத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். 
 
விசாரணை ஒன்றுக்காக குறித்த நாப்ரின் வீட்டுக்குச் சென்ற காவல்துறயினர், அவர் வீட்டில் இருந்து கஞ்சா வாசம் வருவதை அறிந்துகொண்டனர். பின்னர் அது மகிழுந்து திருத்துமிடத்தில் இருந்து வருகின்றது என கண்டுபிடித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா செடி தோட்டமாக வளர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குறித்த நபரை கைது செய்ததோடு, பின்னர் அவரின் வேலைக்கார நபரையும் கைது செய்தனர். 162 செடிகளும் சில ரொக்கப்பணங்களும் மீட்கப்பட்டுள்ளன. 
 
கடந்த திடங்கட்கிழமை Lisieux குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவருக்கும் தலா 18 மற்றும் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை