வடக்கிற்கு காத்திருக்கும் ஆபத்து! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
வடக்கிற்கு காத்திருக்கும் ஆபத்து! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இந்த நாட்களில் வடக்கில் ஏற்பட்டுள்ள குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசொகரியங்களும் ஏற்படும். எனவே குளிரைத் தாங்கக் கூடியவாறான உடைகளை அணிந்திருப்பது சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் அதிகுறைந்த வெப்ப நிலையின் அளவு 18.5பாகை செல்சியசாகக் காணப்பட்ட அதேவேளை அதிகூடிய வெப்பநிலை 29 பாகையாகக் காணப்பட்டது.
 
அடுத்து வரும் தினங்களுக்கும் இதே நிலமை தொடரும். பனிப்பொழிவின் ஒரு வடிவமான (mist) மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கின்றது. மறுநாள் காலை 7.30 மணிவரை தொடரும்.
 
இதனால் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நடமாடும் போது கடும் குளிரைத் தாங்கக் கூடியவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
 
கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கும், மனித உடற்சௌகரியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
விலங்குகளிலும், தாவரங்களிலும், குறிப்பாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் இதன் தாக்கம் காணப்படும்.
 
இந்த நிலமை இரண்டு வாரங்களாவது நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
இதனால் பாதுகாப்பாக இருப்பது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை