2 வெள்ளிக்குள் சொந்த வீடா?

PARIS TAMIL  PARIS TAMIL
2 வெள்ளிக்குள் சொந்த வீடா?

இத்தாலியில் சம்பூக்கா (Sambuca) எனும் ஊரில் தற்போது 1.76 வெள்ளி இருந்தால் போதும் சொந்த வீடு வாங்கலாம்.
 
சம்பூக்காவில் 50 ஆண்டுக்கு முன்னர் 2, 250 பேர் வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது அதன் மக்கள்தொகை 1,300 மட்டுமே.
 
சிலர் நகர்ப்புற வாழ்க்கையை நோக்கிச் செல்வதால் அது மேலும் குறையத் தொடங்கியுள்ளது.
 
மக்கள்தொகையை அதிகரிக்கவும் வட்டாரத்தின் பொருளியலை உயர்த்தவும் அங்குள்ள வீடுகள் ஒரு பவுண்டிற்கு (1.76 வெள்ளி) விற்கப்படுகின்றன.
 
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீடுகளின் விலை பற்றிய அறிவிப்பு வந்தது. வீடுகளின் அளவு 40 சதுர மீட்டரிலிருந்து இருந்து 150 சதுர மீட்டர் வரை இருக்கும்.
 
ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை.
 
வீடுகள் பழமையாக இருப்பதால் அவற்றைச் சீரமைக்க கிட்டத்தட்ட 26,000 வெள்ளி செலவாகலாம். வீடுகளை வாங்குவோர் அதனைச் சீரமைத்துக் கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும். அவற்றைப் போன்று ஏறக்குறைய 200 வீடுகள் அங்குள்ளன.
 
10க்கும் மேற்பட்ட வீடுகள் விற்றுவிட்டதாகவும் இன்னும் சில வீடுகளை விற்பதில் கடும்போட்டி நிலவுவதாகவும் விற்பனையாளர்கள் கூறினர்.
 

மூலக்கதை