திரும்ப வந்துட்டேன் சொல்லு... விமர்சித்தவர்களுக்கு பேட்டால் பதில் சொன்ன தொடர்நாயகன் மகேந்திர சிங் தோனி

தினகரன்  தினகரன்
திரும்ப வந்துட்டேன் சொல்லு... விமர்சித்தவர்களுக்கு பேட்டால் பதில் சொன்ன தொடர்நாயகன் மகேந்திர சிங் தோனி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முதன் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது உறுதியுடன் போராடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிபெற உதவினார். கடந்த போட்டியில் டோனி அட்டகாச அரைசதம் அடித்து, 299 ரன் இலக்கை சேஸ் செய்ய  பெரிதும் உதவியது. கடந்த 2018ல் ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்காத டோனி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் 2019 தொடங்கியதும் அடுத்தடுத்த 3 போட்டியில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.  மேலும் தொடர்நாயகன் விருதை பெற்று விமர்சித்தவர்களுக்கு தனது பேட்டால் பதில் கொடுத்துள்ளார்.

மூலக்கதை