அருண் ஜெட்லிக்கு கேன்சர் பாதிப்பா

தினமலர்  தினமலர்
அருண் ஜெட்லிக்கு கேன்சர் பாதிப்பா

புதுடில்லி,: நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கேன்சர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 66, 2018 மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது இவரது நிதித்துறை ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின் கிச்சைக்குப்பின்ஆகஸ்டில் மீண்டும் நிதியமைச்சரானார்.
இந்நிலையில் ஜெட்லி,சிறுநீரகமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் 'சாப்ட் டிஸ்யூ சர்கோமா' என்ற அரியவகை கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்., 1ல் லோக்சபாவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இவர் சிகிச்சை முடிந்து ஜன., 25க்குள் நாடு திரும்புவார் எனவும், மேலும் தாமதமாகும் எனவும் இரண்டு தகவல்கள் வலம் வருகின்றன.என்ன வகை கேன்சர்'
சாப்ட் டிஸ்யூ சர்கோமா' என்ற அரிய வகை கேன்சர், உடலில்தசைநார், ரத்த நாளங்கள் ஆகியவற்றை பாதிக்கிறது. இதில் 50 வகைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை சிறுவர்களையும், மற்றவை இளைஞர்களையும் பாதிக்கிறது. இந்த கேன்சர் கட்டியை கண்டறிவது கடினம். ஏனெனில் உடலில் மற்ற கட்டிகளை போல இருக்கும். இவ்வகை கேன்சர் உடலில் எந்த பாகத்திலும் உருவாகும். ஆனால் பெரும்பாலானவை கை, கால் மற்றும் அடி வயிற்றில் ஏற்படுகிறது. கேன்சர் கட்டியின் அளவு, வகை மற்றும் பாகத்தை பொறுத்து, இதற்கு சிகிச்சையாக ஆப்பரேஷன், ரேடியேசன் மற்றும் கீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

மூலக்கதை