ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும்

கோல்கட்டா, நாட்டின், ஜி.டி.பி., வளர்ச்சிக்கு ஏற்ப, கரன்சிக்கான தேவையும் அதிகரிக்கும் என, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசு, '2016, நவ., 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவித்தது. இதனால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதையடுத்து, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.எனினும், நிதிச் சந்தையில் பணப் புழக்கம் குறைவாக உள்ளது. ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப, நிதிச் சந்தையில் அதிக கரன்சி தேவைப்படும்.தற்போது, கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புதிய கரன்சிகளில், மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.மின்னணு பணப் பரிவர்த்தனை பெருகி வருவதால், இதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மின்னணு மத்தியஸ்த தீர்ப்பாயம் அமைக்கப்படும். டெபாசிட் திரட்டும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு என, மத்தியஸ்த அதிகாரி நியமிக்கப்படுவார்.வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இணைந்து கடன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதனால், குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை