ஏலக்காய் கிலோ ரூ.1,900மீண்டும் விலை உயர்வு

தினமலர்  தினமலர்
ஏலக்காய் கிலோ ரூ.1,900மீண்டும் விலை உயர்வு

கம்பம் : ஏலக்காய் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. கிலோ, 1,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கேரள ஏலக்காய் தோட்டங்கள், கடந்தாண்டு பெய்த புயல் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன; காய் வரத்தும் குறைந்தது.ஆனால், ஏலக்காய் விலை ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. ஜனவரி, 2ல் அதிகபட்ச விலை கிலோ, 1,532 ரூபாயாகவும், சராசரி விலை, 1,326 ரூபாயாகவும் இருந்தது. ஜனவரி, 9ல் அதிகபட்ச விலை, 1,702 ரூபாயாகவும், சராசரி விலை, 1,439 ரூபாயாகவும் உயர்ந்தது.

கடந்த மூன்று நாட்களாக படிப்படியாக உயர்ந்து, அதிகபட்ச விலை, 2,000 ரூபாயை தொட்டும், சராசரி விலை, 1,500 ரூபாயை தொட்டும் நிற்கிறது.பெரிய, ‘சைஸ்’ காய்கள் குறைவாகவே கிடைக்கும் என்பதால், அதிகபட்ச விலையை கணக்கில் எடுப்பதில்லை. சராசரி விலை மட்டுமே விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பயன்படும். தற்போது சராசரி விலையும் கிலோவிற்கு, 160 ரூபாய் வரை அதிகரித்துஉள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை