வாகன உதிரிபாகங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி பெறும்

தினமலர்  தினமலர்
வாகன உதிரிபாகங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி பெறும்

புதுடில்லி : உள்நாட்டு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறை, அடுத்த நிதியாண்டில், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இக்ரா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தையில் வாகனங்களுக்கான தேவை சரிவை சந்தித்து வரும் நிலையிலும், வாகன உதிரிபாகங்கள் துறை, அடுத்த நிதியாண்டில், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெறும்.கடந்த நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள் ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை, உதிரிபாகங்கள் விற்பனைக்கு ஆதரவாக இருக்கும்.

ஒரிஜினல் உதிரிபாகங்களுக்கான சராசரி தேவையை பொறுத்தமட்டில், அடுத்த நிதியாண்டில், 10 முதல், 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, 2017- – 18ல் எதிர்பார்ப்பு, 9.5 சதவீதமாக இருந்தது.இந்த அதிகரிப்புக்கு காரணம், வர்த்தக வாகனங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தான்.

ஏற்றுமதியை பொறுத்தவரை, நிலவி வரும் வர்த்தக மோதல் சூழல்கள், அதிகரிக்கும் எண்ணெய் விலை போன்றவை, அமெரிக்க ஏற்றுமதியை பாதிக்கக் கூடும்.உதிரிபாகங்களை பொறுத்தவரை, அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பார்த்தால், அமெரிக்காவுக்கு தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை