நாளை தமிழகம் வர இருந்த பியூஷ் கோயலின் பயணம் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நாளை தமிழகம் வர இருந்த பியூஷ் கோயலின் பயணம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாளை தமிழகம் வர இருந்த பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டது. புதிய பொறுப்புகளின் காரணமாக பியூ​ஷ் கோயலின் தமிழக வருகை 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் வரும் பியூஷ் கோயல், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் சென்னையில் இல்லாததால் அவர்களுடனான கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த கட்ட வருகையின் போது இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை