சற்று முன் : லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து! - பரவிய கரும்புகையால் பதட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சற்று முன் : லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து!  பரவிய கரும்புகையால் பதட்டம்!!

இன்று வியாழக்கிழமை காலை லியோன் பல்கலைக்கழகத்தில் பெரும் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
கட்டிடத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது எனவும், கூரை வேலைகள் இடம்பெற்று வந்த இடத்தில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. l'Université Lyon 1 பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் இருந்த தீ பரவியுள்ளது. உடனடியாக கீழ் தளத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகிறது. 
 
அதேவேளை, தீ விபத்தினால் எழுந்த கரும் புகையினால் மிக அதிகளவான புகை பரவியதாகவும்.. 100 மீற்றர்கள் உயரம் வரை கரும் புகை வானில் பரவியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை