வீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா!

PARIS TAMIL  PARIS TAMIL
வீட்டிலேயே முடங்கிய ஹர்திக் பாண்டியா!

இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலையில் பெண்கள் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்தது குறித்து வருத்தமடைந்து வீட்டிலேயே முடங்கி உள்ளாராம்.

 
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றி பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து பேசியதற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரையும் கடந்த வாரத்தில் பிசிசிஐ சஸ்பெண்ட் செய்து நாட்டிற்கு திரும்ப அனுப்பியது.
 
இந்நிலையில் இருவரும் இச்சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரினர். ஆனலும் பிசிசிஐ-யைக்கு அது திருப்தி அளிக்காத நிலையில் கடுமையான தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய பாண்ட்யா, தனது செயலால் கடுமையான வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.
 
எனவே, பாண்ட்யா வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்றும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷூ கூறியிருக்கிறார்.
 
இதுகுறித்து ஆங்கில ஊடகமான மிட்-டேவுக்கு பேட்டி அளித்துள்ளார். `அதில் குறிப்பிட்டுள்ளது, `ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர், அவர் வீட்டைவிட்டே வெளியே வரவில்லை என்றும். அதேபோல், தனக்கு வரும் செல்போன் அழைப்புகளையும் அவர் எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து பேசிய அவர் நாங்கள் வசிக்கும் பகுதியில் இது பண்டிகை காலம் என்றும், இந்த நாட்களில் இளைஞர்கள் பட்டம்விட்டு விளையாடுவர்கள்.
 
பாண்ட்யா கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் இருப்பதால் இதில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த வருடம் வீட்டில் இருந்தும் அவர் அந்நிகழ்ச்சிக்கு வெளியில் வரவில்லை என்று கூறியுள்ளார்.

மூலக்கதை