அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

PARIS TAMIL  PARIS TAMIL
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 9 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
குறித்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தாகவும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
 
இந்நிலையில் அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் பல வீடுகளில் நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
குறித்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
 
இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை.
 
மேலும் அந்தமானில் இந்த வருடம் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலக்கதை