காலையில் திருமணம் - இரவில் உயிரிழந்த பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
காலையில் திருமணம்  இரவில் உயிரிழந்த பெண்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் ஜோடியினர் காலையில் திருமணம் செய்துகொண்டு இரவில் லாட்ஜில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
 
கார்த்திகா - சதீஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில், கார்த்திகா இதற்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.
 
கள்ளக்காதல் ஜோடி யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். வீட்டில் இருந்து உறவினர்களை மறைத்து இருவரும் சந்திப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரி சென்றனர்.
 
பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்றுவிட்டு லாட்ஜில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்தநாள் காலையில் திருமணம் செய்துவிட்டு லாட்ஜிற்கு சென்ற ஜோடி, இரவில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
 
இதில், கார்த்திகா இறந்துவிட சதீஷ் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இது குறித்து இருவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை