எக்ஸிம் வங்கிக்கு ரூ.500 கோடி

தினமலர்  தினமலர்
எக்ஸிம் வங்கிக்கு ரூ.500 கோடி

புதுடில்லி : மத்திய அரசு, எக்ஸிம் வங்கிக்கு, 500 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்க உள்ளது.ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான நிதிச் சேவைகளில், எக்ஸிம் வங்கி என, சுருக்கமாக அழைக்கப்படும், ‘எக்ஸ்போர்ட் – இம்போர்ட் பேங்க் ஆப் இந்தியா’ ஈடுபட்டுள்ளது.

அயல்நாடுகளில் முதலீடு மேற்கொள்வது, சந்தைப்படுத்துவது, சரக்கு ஏற்றுமதி செய்வது, தொழில்நுட்பங்களின் இறக்குமதி உட்பட, பல்வேறு சேவைகளை இவ்வங்கி அளித்து வருகிறது.மத்திய அரசு உருவாக்கிய இவ்வங்கி, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு நிதியுதவி செய்து, அவற்றின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கிறது.

இவ்வங்கியில், 2017 – -18ம் நிதியாண்டு, மத்திய அரசு, 500 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொண்டது. அதுபோல, நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டிலும், 500 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்க, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, இத்தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும் என, எக்ஸிம் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை