ராணுவ தொழில் வழித்தடம் திட்டம் திருச்சியில் 20ம் தேதி துவக்கவிழா : தளவாட கொள்முதல் பிரிவு செயலர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராணுவ தொழில் வழித்தடம் திட்டம் திருச்சியில் 20ம் தேதி துவக்கவிழா : தளவாட கொள்முதல் பிரிவு செயலர் தகவல்

புதுடெல்லி : தமிழகத்தில், ராணுவ தொழில் வழித்தடம் வரும் 20ம் தேதி திருச்சியில் திறக்கப்பட உள்ளது. இதில், துறையின் முக்கிய முதலீடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


‘நாட்டில், இரண்டு ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர்  அருண் ஜெட்லி கடந்த பிப்ரவரி 2ல் நடந்த பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார்.   இதற்காக தமிழகமும் உத்தரபிரதேசமும் தேர்வு செய்யப்பட்டது. இது பல்வேறு  ராணுவ பாதுகாப்பு தொழிற்துறை அலகுகளிடையே இணைப்பதை உறுதி செய்வதாகும்.

தமிழகத்தில்  ராணுவ தொழில் வழித்தடம் திறக்கப்படுவதன் மூலம் சென்னை, ஓசூர், சேலம்,  கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை  இணைக்கும் வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 20ம் தேதி திருச்சியில் நடக்கும் ராணுவ தொழில் வழித்தடம் துவக்க விழாவின் போது, புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி  தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை, பாதுகாப்பு தளவாட கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் ராணுவ தொழில் வழித்தடத்தை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ராணுவ அதிகாரிகள் பங்கேற்று துவங்கி வைக்கின்றனர்.

.

மூலக்கதை