சிவாஜி சிலைக்கு உச்சநீதிமன்றம் தடை

தினமலர்  தினமலர்
சிவாஜி சிலைக்கு உச்சநீதிமன்றம் தடை

மும்பை: அரபிக்கடல் ஓரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பை கடந்த 2016-ம் ஆண்டு மும்பை அரபிக்கடலோரத்தில் ரூ. 3,600 கோடி மதிப்பில் 212 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய சிலை மற்றும் பிரமாண்ட நினைவு சின்னம் எழுப்ப பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.
திபே கோயங்கா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உரிய சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சிலையை அமைக்க உள்ளதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிகக வேண்டும்என்றார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அமர்வு சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை