மெஸ்ஸி படைத்த புதிய உலக சாதனை!

PARIS TAMIL  PARIS TAMIL
மெஸ்ஸி படைத்த புதிய உலக சாதனை!

நட்சத்திர காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

 
ஸ்பெயினில் நடைபெறும் பிரபல கழக அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரில், விளையாடும் முன்னணி அணிகளில் பார்சிலோனா அணியும் ஒன்று.
 
இந்த பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தொடரில் 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
 
எய்பர் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இதன்போது, அந்த அணி சார்பில் லூயிஸ் சுவாரெஸ் 19வது மற்றும் 59வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார். மெஸ்ஸி 53வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்போதே அவர், லா லிகா தொடரில் 400 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார்.
 
லா லிகா கால்பந்து தொடரில், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் வீரரான டெல்மோ சாரா, 278 போட்டிகளில் 251 கோல்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
 
அத்தோடு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில், ஒரே தொடரில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
 
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில், ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடம்பிடித்துள்ள மெஸ்சி, 435வது லீக் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
 
ஆனால், மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 507 போட்டிகளில் விளையாடி 409 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

மூலக்கதை