தோல்விக்கான காரணத்தை கூறிய கோஹ்லி!

PARIS TAMIL  PARIS TAMIL
தோல்விக்கான காரணத்தை கூறிய கோஹ்லி!

 

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே காரணம் என்று அந்தணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.
 
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது.
 
இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.
 
அதன் பின் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் எடுத்து 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
 
எட்டக்கூடிய இலக்கை இந்திய அணி எட்ட முடியாமல் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
 
இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி தோல்விக்கான காரணம் என்ன என்பதை கூறியுள்ளார்.
 
அதில், நாங்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 289 ஓட்டங்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான், நாங்கள் 300-க்கும் அதிகமான ஓட்டம் தான் இலக்காக வரும் என நினைத்தோம்.
 
ஆனால் 289 ஓட்டங்களையே எங்களால் எட்ட முடியாமல் போய்விட்டது. ரோஹித் சர்மா அசத்தலாக செயல்பட்டார்.
 
டோனி அவருக்கு உதவியாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவறான நேரத்தில் டோனி விக்கெட்டை இழந்த போதே வெற்றி எங்கள் கையை விட்டு சென்று விட்டது.
 
தோல்விகளில் இருந்து பாடம் கற்று கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

 

மூலக்கதை