யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவர்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

யாழ்ப்பாணம் பிரபல  கல்லூரியின் இரு மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாடசாலைக்கு சேதம் ஏற்படுத்தி அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது அவர்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த இரு பாடசாலை மாணவர்களும் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
 
இதன் காரணமாக அதிபர் மற்றும் ஆசிரியர் இருவர் மாணவர் இருவருக்கும் கடந்த புதன் கிழமை  தண்டனை வழங்கியுள்ளனர்.
 
பின்னர் குறித்த மாணவர்கள் அவர்களது நண்பர்களை அழைத்து வந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்கி பாடசாலைக்கு சேதம் ஏற்படுத்தியள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை