இந்தியாவுக்கு இலக்கு 289 ரன்கள்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு இலக்கு 289 ரன்கள்

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப் அரைசதம் கடந்தனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி சிட்னியில் துவங்கியது, 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது இடம் பெற்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், அலெக்ஸ் கேரி துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் வீசிய போட்டியின் 2.2வது ஓவரில் பின்ச் (6) போல்டானார். கலீல் அகமது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கேரி புவனேஷ்வர் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். குல்தீப் ஓவரில் பவுண்டரி அடித்த கேரி (24), அதே ஓவரில் அவுட்டானார். அடுத்து இணைந்த ஷான் மார்ஷ், கவாஜா ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க ஆஸ்திரேலிய அணி 23வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. கவாஜா ஒருநாள் அரங்கில் 5வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா சுழலில், கவாஜா (59) சிக்கினார்.

மறுபக்கம் வேகமாக ரன்கள் சேர்த்த ஷான் மார்ஷ், தனது 13வது அரைசதம் எட்டினார். இவர் 54 ரன்னுக்கு குல்தீப் சுழலில் வீழ்ந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (73) தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (11), ஸ்டாய்னிஸ் (47) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் 2, புவனேஷ்வர் குமார் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை